வெள்ள நிவாரணம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 546 கோடி நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: கர்நாடகாவில் கடந்த ஆகஸ்டில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள 2000 கோடி நிதி வழங்க வேண்டுமென கர்நாடகா முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவுக்கு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில்  நேற்று நடந்தது. இதில், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கர்நாடகாவுக்கு கூடுதலாக 546.21 கோடி வழங்க ஒப்புதல் தரப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: