ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் வீடியோ கான்பரன்ஸில் லாலு ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: ரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராகும்படி லாலு பிரசாத் யாதவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ். இவர் 2004ம் ஆண்டு ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகை விடுவதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இது குறித்த குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. உடல் நலக்குறைவு காரணமாக ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் லாலு பிரசாத் யாதவ் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ், ‘‘வழக்கு டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தாலோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: