5 மாநில தேர்தல் களம்

தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். சில தலைவர்களின் பிரசாரம்:

திக்விஜய் சிங் பிரசாரம் செய்யாதது ஏன்?

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் ஏன் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்யாமல் ஒதுங்கிவிட்டார் என்பது தெரியுமா? என்று கேள்வி கேட்டு அதற்கு பதிலையும் அவர் கூறினார். மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்தால், 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக திக்விஜய் சிங் இருந்தபோது, நடத்திய தவறான ஆட்சியை மக்கள் நினைவுக்கு வந்துவிடும். அதனால் யாரும் ஓட்டுபோட மாட்டார்கள் என்பதால்தான் என்று பிரதமர் மோடி கூறினார்.

15 நிமிடங்கள் விவாதிக்க தயாரா?

அம்பிகாபூர்: சட்டீஸ்கரில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக குற்றம்சாட்டினார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பாக 15 நிமிடங்கள் என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா இருக்கிறீர்களா? எந்த இடம், எந்த நேரம் என்பதை நீங்களே தேர்வு செய்து தெரிவியுங்கள், நான் தயார், நீங்கள் தயாரா” என்று சவால் விடுத்தார்.

எச்ஏஎல், அம்பானிஜி, பிரான்ஸ் அதிபரின் அறிக்கை மற்றும் ரபேல் விமானத்தின் விலை குறித்து கேள்வி கேட்பேன், இந்த பேரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பதை பிரதமர் தௌிவுபடுத்த வேண்டும் என்று ராகுல் சரமாரி கேள்வி எழுப்பினார்.

‘காங்கிரஸ் ஒரு ஏடிஎம்’

தாம்தாரி: சட்டீஸ்கர் மாநிலத்தில் 2ம் கட்ட வாக்குப் பதிவுக்கு முந்தைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் கட்சி இந்த மாநிலத்திலும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயலையும் செய்யவில்லை.

கடந்த 50 ஆண்டுகளாக பொய்யான வாக்குறுதிகளை தந்தே ஆட்சிக்கு வந்து ஏமாற்றியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொட்டுவது போல், நிறைவேற்றாத வாக்குறுதிகளை அள்ளித் தருகிறது காங்கிரஸ்’’ என்று குற்றஞ்சாட்டினார்.

‘தேர்தலுக்கு பின்பு கூட்டணியா?’

லக்னோ: சட்டீஸ்கரில் ஆட்சி அமைப்பதற்கு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், பா.ஜ. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேரும் பேச்சுக்கே இடமில்லை. பகுஜன் சமாஜ் கட்சி அஜிதி ஜோகி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு பெரும் மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைக்கும் என்று மாயாவதி நம்பிக்கை தெரிவித்தார். பா.ஜ., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் “சாப் நாத்”, ”நாக் நாத்” (நச்சு பாம்புகள்).

இந்த இரண்டும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தலிகள் ஆகியோருக்கு எதிரானவை. எனவே இந்த 2 கட்சிகளுடன் தேர்தலுக்கு பின்பு கூட்டணி ஆட்சி அமைக்கும் பேச்சுகே இடமில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.

90 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு அஜித் ஜோகியின் கட்சி 55 தொகுதிகளிலும் எஞ்சிய 35 தொகுதிகளில் பிஎஸ்பியும் போட்டியிடுகின்றன. கடந்த சட்டப் பேரவையில் பிஎஸ்பி சார்பில் ஒரே ஒரு எம்எல்ஏதான் இடம்பெற்றிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: