சில்லி பாயின்ட்...

* பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

* நடப்பு ரஞ்சி சீசனின் 3வது லீக் ஆட்டத்தில் இருந்து வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, ஸ்பின்னர் அஷ்வின் விலக வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. ஆஸி. டெஸ்ட் தொடருக்கு முன்பாக போதுமான ஓய்வு தேவை என்பதால் இந்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.

* புவனேஸ்வரில் நடைபெற உள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க விழாவுக்கான ஆன் லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

* இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்று முன்னாள் ஸ்பின்னர் பிஷன் சிங் பேடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

* கேரளாவில் நடைபெறும் 62வது தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்பின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சண்டிகர் வீராங்கனை அஞ்சும் மோத்கில் (24 வயது) தங்கப் பதக்கம் வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: