மீ டூவை தடை செய்யாவிடில் போராட்டம்: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் மிதுளன், பொதுச்செயலாளர் மதுசூதனன்  ஆகியோர் அளித்த பேட்டி: ஆண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் துவங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில்  90 சதவீத வரதட்சணை புகார்கள் பொய்யானவை.  இதற்கு எதிராக  எந்த அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கவில்லை. பெண்களுக்கு தேசிய ஆணையம் இருப்பதுபோல் ஆண்களுக்கும் ேதசிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். சென்னையில் ஒரு வருடத்தில் மட்டும் 8 ஆயிரம் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.  இந்த வழக்கில் பெரும்பாலும் ஆண்களுக்கு எதிராகவும்  பெண்களுக்கு ஆதரவாகவும் தீர்வு வழங்கப்படுகிறது. கணவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கவே  ஜீவனாம்சம் உபயோகப்படுத்தப்படுகிறது.

2015ல் இந்தியா முழுவதும் 92 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.  இவற்றிக்கு மனைவிகளின் துன்புறுத்தலே காரணம். மீடு விவகாரத்தில்  தொழிலதிபர்கள், பிரபலங்களிடம் இருந்து  பணம் பறிக்கும் நோக்கில் புகார்கள் கொடுக்கப்படுகிறது. சட்டத்தை வைத்து ஆண்கள் அடிமைக்கப்படுகிறார்கள்.  எனவே,  சங்கத்தின் மூலம் ஆண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறோம். மீடூவை தடை செய்யாவிட்டால்  போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: