கிராம மக்கள் தவிப்பு முக்கொம்பு பாலம் சீரமைக்காததால் வாகனங்கள் செல்வதில் சிக்கல்

மண்ணச்சநல்லூர்: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட முக்கொம்பு பாலம் கடந்த கடந்த ஆக. 23ம் தேதி உடைந்தது. தற்காலிக ஏற்பாடாக மணல் மூட்டைகள் அடுக்கி பாலம் மேலும் உடையாமல் பாதுகாத்து வந்தனர். தற்போது ஜீயபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அணையின் வடக்குப்புறம் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மணாவிகள் சென்று வருகின்றனர்.  தற்காலிக ஏற்பாடாக அமைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சிதைந்து உள்ளதால் தற்போது அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பாலப்பணிகளும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே அத்தியாவசியம் கருதி போர்க்கால அடிப்படையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தற்போது பணிகள் நடைபெறாமல் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: