மக்கள் போராட்டம் நடத்தியும் மூடாத டாஸ்மாக் கடையை கஜா புயல் மூடியது

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 18 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் அனைத்தும் மூடப்பட்டன. 7 மாதத்திற்கு பிறகு கடந்த 1ம் தேதி அன்று மயிலாடுதுறை நகரில் 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதில் ஒன்று போராட்டத்தால் மூடப்பட்டது. ஸ்டேட் வங்கி சாலையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மட்டும் பல்வேறு எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் ரூ.12 லட்சம் மது விற்கப்படுகிறது. கோயில் நகராமான மயிலாடுதுறை நகரில் டாஸ்மாக் கடைகளே இருக்கக்கூடாது என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் போராட்டங்களின் போது அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் கைதுசெய்தனர்.

தொடர்ந்து  டாஸ்மாக் கடைக்கு ெதாடர்ந்து எதிப்பு இருந்து வருகிறது. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 12 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. நேரம் தவறிவரும் குடிமகன்களும் ஏமாந்துபோகாத அளவிற்கு பிளாக்கிலும் விற்பனை செய்யப்பட்டு குடிமகன்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. திடீரென்று நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கவில்லை. இதனால் குடிமகன்கள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் சித்தர்காடு பகுதியில் உள்ள கடைக்கு சென்றனர்.

ஆனால் அங்கும் கடை திறக்கப்படவில்லை.  உடனடியாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்திற்கு போன்செய்து கேட்டபோது 18, 19ம் தேதி  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாகவும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் 2 தினங்கள் வியாபாரத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்., பல்வேறு இயக்கத்தினர் போராட்டம் நடத்தி மூடப்படாத டாஸ்மாக் கஜா புயல் மூடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: