×

அரசு நிறுவனங்களின் சொத்துகள் விற்பனை பாஜக ஆட்சியில்தான் அதிகம் : ஆய்வில் தகவல்

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விற்பனை செய்யப்பட்டுள்ள அரசு நிறுவனங்களின் பங்குகள் தான், 1991-ம் ஆண்டிலிருந்து விற்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், பங்குகளை காட்டிலும் அதிகம் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 1991-ம் ஆண்டில் இருந்து ரூ.3.91 லட்சம் கோடி மதிப்பிலான அரசு நிறுவனங்களின் பங்குகள், சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.2.91 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகள், கடந்த 4 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் விற்கப்பட்டவை என்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காலத்தில் அரசின் நிறுவனங்கள், பங்குகள் விற்பனை செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் தற்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் விற்பனை செய்யப்பட்ட அரசின் பங்குகள் அளவு இரு மடங்காக உள்ளது. அரசு நிறுவனங்களின் பங்குகளை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் கடந்த ஆண்டில் ரூ.72 ஆயிரம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் ரூ. ஒரு லட்சத்து 56 கோடி திரட்டியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள், அரசு நிறுவனங்களின் சொத்துகள், பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை அடையப் மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பெரும்பாலும் நஷ்டத்தில் செயல்பட்ட அரசு நிறுவனங்களின் பங்குகளே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதை நிலை தொடர்ந்தால் அது சிக்கலாகவும் மாறும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்தால், நிறுவனங்களின் மதிப்பு குறைந்துவிடும் எனவும் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state enterprises ,governments ,BJP , National Democratic Alliance, assets of state enterprises, shares, sales
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...