×

பிஜி தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு

சுவா: பிஜி தீவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.25 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானது. தலைநகர் சுவாவுக்கு கிழக்கே 283 கி.மீ தொலைவிலும் கடலுக்கு அடியில் சுமார் 534 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக அதிகமான ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் தாக்கத்தை பெருமளவு உணர முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதேபோன்று கடலுக்கடியில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பசிபிக் பெருங்கடல் மற்றும் அதன் சுற்றுவட்டப்பகுதிகளில் உள்ள எரிமலை வெடிப்புகளுக்கு உட்பட்ட பூகம்ப அபாய வளையத்தில் பிஜி தீவு அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Earthquake ,Fiji Island , Earthquake,Fiji Island,Record,6.7,Richter scale
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்