உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் துவக்க விழாவிற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை பிற்பகல் 12 மணிக்கு துவக்கம்

புபனேஸ்வர்: ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. புபனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 27-ம் தேதி உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான துவக்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேலும் கட்டாக்கில் உள்ள பிராபாட்டி ஸ்டேடியத்தில் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் துவக்க விழாவிற்காக சுமார் 10,500 டிக்கெட்டுகளும், மறுநாள் நடைபெறும் உலகக் கோப்பை கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு 30,000 டிக்கெட்டுகளும் விற்பனையாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க விழாவிற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை பிற்பகல் 12 மணியளவில் தொடங்கும் என ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அட்டவணைப்படி, நவம்பர் 28 முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும். இதில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: