Operation Sovereign Borders என்ற எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எழுந்த அச்சுறுத்தல்களை அடக்கியுள்ளோம்: ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் ஆட்கடத்தலை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட எல்லைப் பாதுக்காப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய கடல் பாதுகாப்பு சூழல் தொடர்பாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் காணொலி வாயிலாக விளக்கமளித்திதார். அவர், “ஆஸ்திரேலிய அரசு Operation Sovereign Borders என்ற எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்த இந்த 5 ஆண்டுகளில் நாம் வெற்றிகரமாக படகுகளை நிறுத்தியுள்ளதுடன் ஆட்கடத்தல் நடவடிக்கை மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எழுந்த அச்சுறுத்தல்களையும் அடக்கியிருக்கிறோம். ஆஸ்திரேலிய அதிகாரிகள் 33 படகுகளை இடைமறித்து அதிலிருந்த 827 பேரை தாம் வந்த இடத்திற்கே திருப்பியனுப்பியது மட்டுமல்லாது எமது பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம் 70 ஆட்கடத்தல் பயணங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே அவற்றை தடுத்திருக்கிறோம்” எனக் கூறியிருக்கிறார். 2013க்கு முன்னர் இலங்கை, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள், மியான்மர் என போரை எதிர்கொண்ட நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக படகு வழியாக ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் கரை ஒதுங்கினர். இது, அந்நாட்டில் பெரும் அரசியல் சிக்கலாக உருவெடுத்த நிலையில், இந்நடவடிக்கை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நடவடிக்கையின் கீழ் அச்சுறுத்தலுக்கான உள்ளான. அகதிகள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவதை ஐ.நா. உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகளும் கண்டித்திருந்தன.

மேலும் அக்காணொலியில், “கடல் வழி ஆட்கடத்தல் செயல்பாடானது, ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலான ஒன்றாகவே காணப்படுகின்றது என தெரிவித்தார். அண்மையில் வியாட்நாமிலிருந்து ஆட்கடத்தல் படகு ஒன்று வந்திருந்தமையானது இந்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுகிறது என்பதற்கான சிறந்த நினைவூட்டல் ஆகும். இப்படகில் வந்தவர்கள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவில் எவரும் குடியமர்த்தப்படவில்லை. இப்படகு பயணம் தோல்வியடைந்திருந்தாலும் ஆஸ்திரேலியாவை இந்தப் படகு வந்தடைந்ததை தமது வியாபார யுக்தியாக பயன்படுத்தும் ஆட்கடத்தல்காரர்கள் மற்றவர்களையும் இணங்கவைக்க முயல்கின்றனர். குற்றவாளிகளான ஆட்கடத்தல்காரர்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம். கூடுதல் கடல்வழி மற்றும் வான்வழி கண்காணிப்புகள் மூலம் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது” என பீட்டர் டட்டன் தெரிவித்திருக்கிறார். அத்துடன் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை, மாற்றப்படவும் மாட்டாது என்பதையும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டட்டன் பதிவு செய்திருக்கிறார். இந்நடவடிக்கை நடைமுறைக்கு வந்த பிறகு கூட ஆஸ்திரேலியாவை நோக்கிய படகுப் பயண முயற்சிகள் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு படகுகளில் சென்ற பல ஈழத்தமிழ் அகதிகள் இந்தோனேசியா உள்ளிட்ட இடைப்பட்ட நாடுகளில் தத்தளிக்கும் நிலைமையும் ஏற்பட்டது. இப்படி, ஆஸ்திரேலியா செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான அகதிகள் இன்றும் இந்தோனேசிய முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அதே போல், படகு வழியாக சென்ற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: