புது முயற்சியில் ஆப்பிள் நிறுவனம்: சான் டியகோவில் புதிதாக வயர்லெஸ் பொறியாளர்களை நியமிக்க திட்டம்

சான் டியகோ: ஆப்பிள் நிறுவனம் தமக்கென சொந்தமாக ப்ரோசசர் (processor) மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக சான் டியகோவில் (San Diego) பணியாற்ற இந்த மாதத்தில் மட்டும் 10 வேலைவாய்ப்பு தகவல்களை அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது. இதன்மூலம் போட்டி நிறுவனங்களின் சாதனங்களை விட ஆப்பிள் ஃபிளாக் ஷிப் (Apple flagship) சாதனங்களை வித்தியாசபடுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதனால் ஆப்பிள் நிறுவன செலவினங்களையும் குறைக்க முடியும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சான் டியாகோவில் உள்ள ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் வன்பொருள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் தேவை என 10 வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளது. அதில் Wi-Fi, ப்ளூடூத், 3G மற்றும் LTE மோடம் சிக்னல் செயலாக்க தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற, அனுபவம் நிறைந்தவர்கள் தேவை என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: