சர்வதேச நிதியம் கெடுபிடியால் விரக்தி நாடு நாடாக சென்று நிதி கேட்கும் இம்ரான்

துபாய்: சர்வதே நிதியத்திலிருந்து (ஐஎம்எப்), பாகிஸ்தான் அதிகளவில் நிதியுதவி பெற்று வந்தது. ஆனால் அது தற்போது பல கெடுபிடிகளை விதித்துள்ளது. இதனால்,  சர்வதேச நிதியத்தை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக, பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுகளிடம் நிதியதவி பெற்று வருகிறார். கடந்த செப்டம்பரில் அவர் சவுதி அரேபியா சென்று நிதி கேட்டார். 6 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சவுதி ஒப்புக் கொண்டது.

இந்த மாத தொடக்கத்தில் சீனாவுக்கு இம்ரான் கான் சென்று நிதியுதவி கேட்டார். 6 பில்லியன் அமெரிக்க டாலர் தர சீனாவும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் துபாய்க்கு இம்ரான்கான் நேற்று சென்றார். அந்நாட்டிடம் இருந்து 6 பில்லியன் டாலர் நிதியதவி பெற பாகிஸ்தான் விரும்புகிறது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகள் கையெழுத்திடலாம் என கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் அவர் மலேசியா சென்று நிதியுதவி கேட்கலாம் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: