உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் கால் இறுதியில் மேரி கோம்

புதுடெல்லி: மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் தொடரின் 48 கிலோ லைட்வெயிட் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானின் அய்ஜெரிம் கஸனயேவாவுடன் நேற்று மோதிய மேரி கோம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார். இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றுள்ள கோம், 6வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை தக்கவைத்திருப்பது இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகளிர் 54 கிலோ பாந்தம் வெயிட் பிரிவில் கஜகஸ்தானின் டினா ஸோலமானுடன் மோதிய இந்திய வீராங்கனை மணிஷா மவுன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மகளிர் 60 கிலோ லைட்வெயிட் பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி தோல்வியைத் தழுவினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: