×

நியூசிலாந்து ஏ 458/9 டிக்ளேர்

மவுன்ட் மவுங்காநுயி: இந்தியா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 458 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. பே ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. பிரித்வி ஷா 62, அகர்வால் 65, ஹனுமா விஹாரி 86, பார்திவ் 94, விஜய் ஷங்கர் 62, கவுதம் 47 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்திருந்தது. ரூதர்போர்டு 106 ரன், டிம் செய்பர்ட் 13 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரூதர்போர்டு 114 ரன் எடுத்து (181 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்) சாஹர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

செய்பர்ட் 20, பிலிப்ஸ் 16, ரவிந்த்ரா 2, கிளீவர் 53, பிரேஸ்வெல் 48, ஜேமிசன் 30, வான் வோர்கம் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து ஏ அணி 134 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 458 ரன் குவித்து முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்தியா ஏ பந்துவீச்சில் கவுதம் 3, சாஹர், சாய்னி தலா 2, சிராஜ், ஷங்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 9 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 33 ரன், முரளி விஜய் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில், இப்போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Zealand , New Zealand A, india A,
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்