குறைந்த விலைக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி செய்த பெண் கைது

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி 500 பேரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், காமராஜர்புரம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (51). தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருநின்றவூர், எம்ஜிஆர் நகர், 2வது தெருவைச் சேர்ந்த ஜோதி (36) என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதையடுத்து, ராஜ்குமாரிடம் குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாக ஜோதி உறுதியளித்துள்ளார்.  இதனை நம்பி கடந்த 6 ஆண்டுக்கு முன்பு ராஜ்குமார், தனக்கும் உறவினர்கள் 3 பேருக்கும் நிலம் வாங்கித் தரும்படி ரூ.60ஆயிரத்தை ஜோதிடம் கொடுத்துள்ளார். ஆனால், ஜோதி வீட்டுமனை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.   

இதற்கிடையில், ஜோதி நேற்று வீட்டை காலி செய்துகொண்டு தப்பிக்க முயன்றார். அவரை பொதுமக்கள்  பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக ஜோதி சமூக அமைப்பு நடத்தி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஜோதிடம் ரூ.15 ஆயிரம் பெற்றுஅவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கி மனை வாங்கி கொடுக்காமல் ரூ.75 லட்சம் மோசடி தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ஜோதியை கைது செய்து திருவள்ளூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி இரவில் புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: