தீபாவளி பண்டிகைக்காக தகுதிநீக்க எம்எல்ஏக்களுக்கு தலா 5 கோடி தரப்பட்டதா?: தங்கதமிழ்ச்செல்வன் விளக்கம்

விருதுநகர்: தீபாவளிக்காக தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு தலா ₹5 கோடி தரப்பட்டதாக கூறுகிறார்கள், அப்படி தரப்பட்டிருந்தால் சந்தோஷமாக கொண்டாடி இருப்போம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.விருதுநகரில் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:இரட்டை இலை சின்ன விவகாரத்தில், போனில் பேசி பணம் கொடுக்க முயன்றதாக, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது ஓராண்டுக்கு முன் வழக்கு தொடர்ந்தனர். சரி, பேசியதாகவே ஒப்புக் கொள்கிறோம். ஆனால், யாரிடம் பேசினார். தேர்தல் ஆணையத்திடம் எவ்வளவு பணம் கொடுத்தார்; யாருக்கு கொடுத்தார் என சிபிஐ நீதிமன்றம் ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுச் செய்தோம். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேல்முறையீட்டு வழக்கில் டிச. 4ம் தேதி ஆஜராகிறார். அதில் குற்றமற்றவர் என நிரூபித்து வெளியே வருவார்.

20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க அமமுக தயாராக உள்ளது. அதிமுக தயாராக உள்ளதா? கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை டிடிவி தினகரன் விரைவில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவார். தீபாவளி பண்டிகைக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும் தலா ₹5 கோடி கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அப்படி பணம் கிடைத்தால் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடியிருப்போமே?இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: