வங்கதேச போட்டியை சமாளிக்க ரஷ்யாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்

திருப்பூர்: ஆடை ஏற்றுமதியில் வங்கதேச நாட்டின் போட்டியை சமாளிக்க மத்திய அரசு ரஷ்யாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியுள்ளதாவது: சில்லரை வர்த்தக நிறுவனங்கள் மிகுந்த மிகப்பெரிய வர்த்தக சந்தை ரஷ்யா. 2017-18ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு  ₹241 கோடி மதிப்பிலான பின்னலாடை, ₹295 கோடி மதிப்பிலான ஓவன் ரக ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யாவை உள்ளடக்கிய குரேஷியா நாடுகளுடன்,  வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு ஏற்கனவே துவக்கியது.  

ஆனால், ஐரோப்பாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சு போலவே, குரோஷியாவுடனான ஒப்பந்தம் முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது.   இந்நிலையில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வங்கதேசத்தின் கருத்துக்கு, ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துள்ளது. விரைவில், இவை ஒப்பந்தம் செய்ய உள்ளன. இதனால் வங்கதேச ஆடைகள், வரி ஏதுமின்றி ரஷ்ய  சந்தையில் இறக்குமதியாகும். ரஷ்யாவுக்கான நமது நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், ரஷ்யாவுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்  மேற்கொள்ள முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: