பழைய மாடல் கார்கள் தயாரிப்பு நிறுத்தம்

மும்பை: பாதுகாப்பு மற்றும் பிஎஸ் - 6 தரவிதிப்படி மாசு பாதிப்பை தராத இன்ஜினுடன் கார்களை உருவாக்கும் வகையில், பழைய மாடல் கார்கள் தயாரிப்பை நிறுத்த பிரபல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் உள்ளது. இதற்காக, பல ஆண்டுகள் முன் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் தயாரிக்க வேண்டாம் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பிரபல கார் நிறுவனங்கள், தங்களின் பல ஆ்ண்டு முந்தைய தயாரிப்பு வாகனங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் 1984ம்  ஆண்டில் இருந்து பிரபலமாக விற்பனையான மாருதி ஆம்னி கார்கள் மற்றும் ஜிப்சி  ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவின் ராணுவ துறையில்  அதிகம் பயன்பட்டது ஜிப்சி வகை வாகனங்கள்.

  இதுபோல, உலகிலேயே மிகக்குறைந்த விலையில் விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்திய மாடல் டாடா நானோவும் நிறுத்தப்படுகிறது. மேலும், இந்தியாவின் ஒரே சிறிய ரக மின்சார கார் மகிந்திராவின் இ20, பியட் பன்டோ  ஆகியவையும் இந் வகையில் நிறுத்தப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சிறிய ரக கார்களான ஹுண்டாய் இயான், ஹோண்டா பிரியோ ஆகியவற்றின் விற்பனையும் சரிந்து வருகிறது. இதனால் இவையும் நிறுத்தப்படுகின்றன. வரும் 2020க்குள் அடுத்து சில நிறுவனங்களின் பழைய  மாடல் கார்கள் உற்பத்தி நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதுபோல, உலகில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் நகரங்கள் வரிசையில் இந்தியாவின் 12 நகரங்கள் உள்ளன. இவற்றை கருத்தில் ெகாண்டு இந்த நடவடிக்கையை  அரசு எடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: