மருத்துவ காப்பீடு எடுக்கணுமா?

* பாக்கெட்டில் பணம் நிரம்பியிருக்கிறதோ இல்லையோ... நோய்கள் பெருகி விட்டன. இதெல்லாம் ஆயிரத்தில் ஒருவருக்குதான் வரும் என்றிருந்த நோய்கள் கூட, இன்று நூற்றில் ஒருவரை ஆட்டிப் படைக்கின்றன. டாக்டரிடம்  சும்மா செக்கப்புக்கு சென்று ஸ்கேன் செய்தால் போதும், உள்ளே இருக்கின்றன எலும்புகள் தெரிகிறதோ இல்லையோ, நோய் பட்டியல் கண்கூடாக தெரிகின்றன. இதற்கு வைத்தியம் பார்க்க செலவு லட்சங்களை தொட்டு விடும்.  இதனால் மருத்துவ காப்பீடு மிக பிரபலம் ஆகி விட்டது. ஏஜென்ட் சொல்வதை விட, நீங்களே சரியானதை தேர்வு செய்வதுதான் உத்தமம்.

* மருத்துவ காப்பீட்டில் உடனடி பலன் தருபவை உள்ளன. குடும்பத்துக்கு எடுக்கும்போது மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகு மீண்டும் ‘ரீஸ்டோர்’ஆகும் காப்பீடுகளும் உள்ளன. அதாவது, 5 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்திருந்து,  அந்த ஆண்டில் குடும்ப உறுப்பினர் யாருக்கேனும் பாலிசியில் சிகிச்சை பெற்றிருந்தாலும், மீண்டும் அதே ஆண்டில் ₹5 லட்சத்துக்கு சிகிச்சை பெற முடியும்.

* டாப் - அப் பாலிசியும் உள்ளது. பிரதான பாலிசிக்கு மேல் சிகிச்சை செலவு வந்து விட்டால் இதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* இதை விட முக்கியம் என்னவென்றால், நீங்கள் மருத்துவ பாலிசி எடுக்கும்போது உங்கள் தாய், தந்தை, தாத்தா, பாட்டி மற்றும் நெருங்கிய ரத்த உறவுகளுக்கு உள்ள பரம்பரை வியாதிகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ப  பாலிசி எடுக்கலாம்.

* பல லட்சத்துக்கு எடுத்திருந்தாலும், மருத்துவ காப்பீட்டில் சில வியாதிகளுக்கு இவ்வளவுதான் என்ற உச்சவரம்பு உண்டு இதை தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும்.

* சில நோய்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுக்கு பிறகுதான் சிகிச்சை செலவை ஏற்க முன்வருவார்கள். இதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பாலிசி எடுத்து எத்தனை மாதம், நாட்கள், வருடங்களில் எந்தந்த நோய்க்கு  சிகிச்சை அளிக்கப்படும் என்பதையும், மருத்துவமனை பட்டியலையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

* முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டு கிளைம் செய்வதை விட, சிகிச்சைக்கு சேர்ந்ததும் காப்பீடு நிறுவனமே செலவுகளை ஏற்கும் வகையில் தேர்வு செய்வதுதான் நல்லது.

* வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற தேவையானால் அதற்கும் சேர்த்து பாலிசி எடுக்கலாம். பிரீமியம் கட்டுவது பெரிதல்ல. உங்கள் நோய் பாதிப்பு ஆபத்துகளை அறிந்து எடுப்பதுதான் சரியான முடிவாக அமையும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: