ஆகஸ்ட் மாத விலைக்கு குறைந்தது பெட்ரோல்

புதுடெல்லி: மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த விலையை பெட்ரோல் மீண்டும் எட்டியது. சென்னையில் நேற்று பெட்ரோல் 21 காசு சரிந்து ₹79.66க்கும், டீசல் 19 காசு சரிந்து ₹75.63க்கும் விற்பனையானது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்தன. அக்டோபர் 4ம் தேதி வரை பெட்ரோல் ₹8.07 டீசல் ₹8.17 உயர்த்தப்பட்டது. அக்டோபர் 5ம்  தேதி மத்திய அரசு அறிவிப்புப்படி பெட்ரோல் ₹2.63, டீசல் ₹2.68 குறைந்தது. மீண்டும் அடுத்த நாளில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கடந்த  மாதம் 17ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது.   நேற்று வரை சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ₹6.44, டீசலுக்கு    ₹4.41 குறைந்துள்ளது. நேற்று பெட்ரோல் டெல்லியில் ₹76.71, மும்பையில் ₹82.23, டெல்லியில் டீசல் ₹71.56, மும்பையில் ₹74.97க்கு  விற்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: