சில்லி பாயின்ட்...

* உலக மகளிர் பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடரின் 57 கிலோ எடை பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை சோனியா தகுதி பெற்றார். மொராக்கோவின் டோவா டவுஜானியுடன் நேற்று மோதிய சோனியா 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றார்.

* உலக ஜூனியர் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்தியாவின் லக்‌ஷியா சென் தகுதி பெற்றுள்ளார்.

* ஆஸ்திரேலிய தொடரின்போது ஆக்ரோஷத்தை குறைத்துக்கொண்டு பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியிடம் பிசிசிஐ நிர்வாகக் குழு வலியுறுத்தி உள்ளது.

* கோஹ்லியுடன் தேவையில்லாமல் வார்த்தைப் போரில் இறங்குவதை ஆஸ்திரேலிய வீரர்கள் தவிர்க்க வேண்டும் என்று தென் ஆப்ரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: