கஜா புயுலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரம் ஆகும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: பயுலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரம் ஆகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். புதுக்கோட்டையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளதாக தெரிவித்த அவர், வெளிமாவட்டங்களை சேர்ந்த 500 பணியாளர்களை மின்சார பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நகர் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான கஜா’ புயல் நாகையில் கரையை கடந்தது. 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் கஜா கோரதாண்டவம் ஆடியது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: