மின்துறைக்குதான் அதிக பாதிப்பு: துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று பகல் 1.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கஜா புயல் காரணமாக திண்டுக்கல், தேனி பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் மழையும் பெய்கிறது. கஜா புயலால் மின்சார துறைக்குத்தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மின் கம்பங்கள் உடைந்து சாய்ந்துவிட்டன. பல இடங்களில் மின் கம்பங்கள் குடிசை வீட்டின் மீது சரிந்திருக்கிறது. இதில் இதுவரை 11 பேர் இறந்ததாக தகவல் வந்துள்ளது. பாதிப்புகள் பற்றி கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மறுசீரமைப்புப்பணியும் உடனடியாக நடக்கும். கோடியக்கரையில் கப்பலில் இருந்து மீட்பு பணிக்காக சென்ற 16 விமானப்படை வீரர்கள் பத்திரமாக உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: