டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை: கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்ேடா-ஜியோ அறிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழுக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். நேற்று மாலை 3 மணி அளவில் தொடங்கிய கூட்டம் 5 மணிக்கு முடிந்தது. ஜாக்டோ-ஜியோவில் இருந்து பிரிந்து சென்ற சங்கங்களை இணைக்கும் கூட்டம் கடந்த வாரம் நடந்த நிலையில் நேற்று உயர்மட்டக் குழு நடந்துள்ளது. கூட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சிசுந்தரம், சுப்பிரமணியன், அன்பரசு தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:  ஜாக்டோ -ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று கூடியது. எங்களின் கோரிக்கைகளான இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் முரண்பாடுகளை களைய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கேட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கை குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ ஒருமித்த முடிவு எடுத்தது. அதன்படி, டிசம்பர் 4ம் தேதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் கோரிக்ைக நிறைவேறும் வரை நடக்கும். 25ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கும். 30ம் தேதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும். 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேலை நிறுத்தம் தொடர்பான பிரசார கூட்டங்கள் நடக்கும்.  

ஜாக்டோ-ஜியோவில் 25 ஆசிரியர் சங்கங்கள், 30 அரசு பணியாளர் சங்கங்கள், ஏற்கனவே இருந்த 74 அரசு ஊழியர் சங்கங்கள்,  தற்போது இணைந்த சங்கங்கள் என மொத்தம்  165 சங்கங்கள்  ஒருமித்து 4ம் தேதி முதல் ெதாடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: