லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு சிவிசி.யின் விசாரணை அறிக்கையில் சிபிஐ இயக்குனருக்கு எதிராக கருத்து: பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான புகார்களில் சில கூறுகள் பாராட்டும்படியாக இல்லை’ என மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பின் (சிவிசி) அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டனர். இதன் காரணமாக, மத்திய லஞ்ச  கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பரிந்துரையின் அடிப்படையில் இரு அதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பி வைத்தது. சிபிஐ.யின் தற்காலிக இயக்குனராக இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அலோக் வர்மான மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்யும்படி சிவிசி.க்கு உத்தரவிட்டது. முதல் கட்ட சிவிசி.யின் விசாரணை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிறப்பித்த உத்தரவில், ‘‘சிவிசியின் அறிக்கை முழுமையாக உள்ளது. அதில், அலோக் வர்மா மீதான புகார் குறித்து சிவிசி தெரிவித்துள்ள சில கருத்துகள் பாராட்டும்படி இருக்கிறது. சில கருத்துகள் பாராட்டும்படியாக இல்லாமல் இருக்கிறது.

இவை குறித்து விசாரணை நடத்த கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, சிவிசி.யின் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் அலோக் வர்மாவுக்கு வழங்க வேண்டும். அவர் வரும் 19ம் தேதிக்குள் அதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதை சீலிடப்பட்ட கவரிலேயே தர வேண்டும்’’ என்று கூறி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அஸ்தானாவுக்கு அறிக்கை தர மறுப்பு:

அலோக் வர்மா மீதான புகார் குறித்த சிவிசி.அறிக்கையின் நகலை தங்களுக்கும் தர வேண்டும் என ராகேஷ் அஸ்தானா தரப்பில் ஆஜரான அவரது வக்கீல் முகில் ரோத்தகி கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை ஏற்க தலைமை நீதிபதி மறுத்து விட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: