முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரண உதவி

சேலம்: கஜா புயலுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. அதிகாலை 2.30 மணியில் இருந்து வீசிவரும் புயலால், நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 11 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.   சேத மதிப்புகள் கணக்கிடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கஜா புயலின் வருகை குறித்து ஆலோசித்து தாழ்வான பகுதிகளிலும், குடிசைகளிலும் வசிப்பவர்களை பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். 84,978 பேர், 471 முகாம்களில் தங்கியுள்ளனர். இதனால் உயிர்ச்சேதமும், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. இயல்புநிலை  திரும்பும்வரை மக்கள், முகாம்களிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலில் மின்கம்பங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்கும் வகையில் ஏற்கனவே 7 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் எத்தனை படகுகள் சேதம் அடைந்தது என்பது குறித்து மீன்வளத்துறை, வருவாய் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிக்கை அரசிடம் கிடைத்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 10லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சமும், சிறுகாயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் வழங்கப்படும். சேத மதிப்பீடுகளை முழுமையாக கணக்கிட்ட பின்பு, மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும். புயலால் அதிகளவில் மரங்கள் சாய்ந்துள்ளது. அதிநவீன உபகரணங்கள் கொண்டு, அதனை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வேதாரண்யம் தனித்தீவாக மாறிவிட்டதா? என்றும் அங்குள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பகுதி வாரியாக சேத விபரங்களை அறிந்து அதற்கேற்ப மீட்பு குழுக்களை அனுப்புகிறோம். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், உள்ளூரிலேயே தங்கி பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். புயலின் சீற்றம் குறைந்தவுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவேன் என தெரிவித்தார்.

எந்த புயல் வந்தாலும் மக்களை பாதுகாப்ேபாம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,தமிழகத்தில் எந்த புயல் வந்தாலும் உரிய நடவடிக்ைக எடுத்து மக்களை பாதுகாப்ேபாம் என்றார்.

முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், `தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளேன். பாதிப்புகள் குறித்து அறிக்கை தயாரித்து உடனடியாக, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, நிதி உதவி கேட்க உள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், விரைவில் மின் விநியோகம் செய்யப்படும்.’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: