மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர், நவ.17: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 4,203 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 4,785 கனஅடியானது.  டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாயில் 400 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 100.16 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 100.36 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 65.30 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 4,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: