சிஐஐ கருத்தரங்கில் 100 நிறுவனங்கள் பங்கேற்பு

சென்னை: சிஐஐ நிறுவனம் சார்பில் வர்த்தகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் வர்த்தக நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

கான்பிடரேசன் ஆப் இந்தியன் நிறுவனம் சார்பில் வர்த்தக துறையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை துறைமுக தலைவர் ரவீந்தரன், துறைமுக சுங்கத்துறை ஆணையர் அஜீத்குமார், சிஐஐ நிர்வாக அதிகாரிகள் பிரசன்னா ராஜகோபால், மகாதேவன், சந்திரசேகரன், தீபக் ராமசாமி மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் சிஐஐ நிர்வாகத்தை சேர்ந்த பேராசிரியர் சந்திரசேகரன் கூறியதாவது: வணிகத்தை எந்த அளவில் சுலபமாக நடத்த முடியும் என்பது குறித்து ஒவ்ெவாரு வருடமும் உலக வங்கி அறிக்கை தாக்கல் செய்வார்கள். அந்த அறிக்கையை பயன்படுத்தி வர்த்தகத்தில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

 

மேலும் உலக அளவில் வர்த்தகம் செய்யும் போது சுலபமாக இருந்தால்தான் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுடன் அதிக அளவு வர்த்தகம் செய்வார்கள். அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வர்த்தகம் செய்யும் போது முதலீடுகள் அதிகரிக்கும். உலக அளவில் வர்த்தகமும் அதிகரிக்கும். மேலும், சர்வதேச அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் போது கன்டெய்னர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது எவ்வளவு மணிநேரம் ஆகிறது, துறைமுகத்துக்கு கன்டெய்னர் வந்தவுடன் எவ்வளவு மணி நேரத்தில் இறக்கப்படுகிறது என்று வர்த்தக நிறுவனங்களுக்கு விளக்கப்பட்டது. கன்டெய்னர்களை விரைவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வகையில் ஏஇஓ அதாவது சுங்கவரித்துறை அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்து கொண்டால் இதை விட விரைவாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம். இதுதவிர வர்த்தகத்தில் தொழில்நுட்பம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: