பெரியார் குறித்து விமர்சனம்: எச்.ராஜாவுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பெரியார் குறித்து விமர்சனம் செய்துள்ள பாஜ தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:  தந்தை பெரியார் பற்றி பள்ளிப் பாடநூலில் பாடம் இடம்பெற்றிருப்பது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ள கருத்துகள் அவதூறானவை; ரசனைக்குறைவானவை; கண்டிக்கத்தக்கவை. பெரியாரின் வாழ்க்கை அனைவருக்கும் பாடம். அவற்றிலிருந்து எச்.ராஜா போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன.எச்.ராஜா போன்றவர்கள் மீண்டும், மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். தந்தை பெரியாரின் கொள்கைகள் சிறப்பானவை. தமிழ் சமுதாயத்துக்கு அவசியமானவை. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் கூட சமுதாயத்துக்கு பொருந்தக்கூடியவை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: