காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370ம் பிரிவுக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி:  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கொண்டு வரப்பட்ட 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி குமாரி விஜயலட்சுமி ஷா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்ட 1957 ம் ஆண்டுடன் காலாவதி ஆகிவிட்டது. எனவே, அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள்  சந்திராசூட், எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், `காஷ்மீரில் தற்போது உணர்ச்சிப்பூர்வமான நிலை நிலவுவதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: