கேப்டன் ஜோ ரூட் அபார சதம்: இங்கிலாந்து முன்னிலை

கண்டி: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரீட் 124 ரன் விளாசினார். பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த  இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 285 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 336 ரன் குவித்தது. கருணரத்னே 63, தனஞ்ஜெயா டி சில்வா 59, ரோஷன் சில்வா 85 ரன் விளாசினர்.

இதையடுத்து, 46 ரன் பின்தங்கிய நிலையில் நேற்று 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 76 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் 3ம் நாள் ஆட்டம் முடிவிக்கு வந்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 124 ரன் (146 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோ பர்ன்ஸ் 59, ஜென்னிங்ஸ் 26, பட்லர் 34 ரன் எடுத்தனர். பென் போக்ஸ் 51 ரன் (102 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஆண்டர்சன் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா 23 ஓவரில் 106 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். தில்ருவன் 2, புஷ்பகுமாரா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் ஒரு விக்கெட் இருக்க, இங்கிலாந்து அணி 278 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: