சில்லி பாயின்ட்...

* ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டங்களில் இந்திய வீரர்கள் கிடாம்பி காந்த், சமீர் வர்மா இருவரும் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினர். ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவுடன் மோதிய கிடாம்பி 17-21, 13-21 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். உள்ளூர் வீரர் லீ சேக் யியுவுடன் மோதிய சமீர் வர்மா 15-21, 21-19, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார்.

* ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்று ஆஸி. முன்னாள் நட்சத்திரம் மைக் ஹஸி கூறியுள்ளார்.

* கொசோவா வீராங்கனை டான்ஜெடா சாதிக்குக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தியாவில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஆண்கள் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் தொடரை விலக்கிக்கொள்ள நேரிடும் என்று உலக பாக்சிங் கூட்டமைப்பு அச்சுறுத்தி உள்ளது.

* 2020ல் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 தொடருடன் சர்வதேச டி20ல் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பேப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

* இந்தியா - ஜோர்டான் அணிகள் மோதும் நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி அம்மான் நகரில் இன்று நடைபெறுகிறது. பிபா தரவரிசையில் இந்தியா 97வது இடத்திலும், ஜோர்டான் 112வது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி நட்சத்திர வீரர் சுனில் செட்ரி காயம் காரணமாக இடம் பெறவில்லை.

* உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்தியாவின் லக்‌ஷியா சென் தகுதி பெற்றுள்ளார்.

* பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி20 தொடரில் விளையாட உள்ளனர்.

* புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 35-23 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: