ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 10 கோடி நிலத்துக்கு போலி பட்டா: 5 பெண்கள் கைது

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் 57 சென்ட்  நிலத்தினை போலி பட்டா மாற்றம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். தேவாரப்பாடல் புகழ்பெற்ற  தலம் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில். இக்கோயிலில்  சித்திரையில் 10 நாட்கள் பிரமோற்சவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆட்சீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில், ஆட்சீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த 9 பேர் கூட்டாக பட்டா மாற்றம் செய்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, செயல் அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்தனர். அதில், அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த முனியம்மாள் (52), ராதா (56), ருக்மணி (56), மாரியம்மாள் (54), சத்யா (38) ஆகிய 5 பெண்கள் உட்பட 9 பேர் போலியாக பட்டா தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 5 பெண்களையும்  நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அச்சிறுப்பாக்கம் வடக்கு காலனியைச் சேர்ந்த வேலவன், ஜோதி, அன்பழகன், லட்சுமி ஆகிய நான்கு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: