எல்இடி பல்பு, ஸ்பீக்கரில் கடத்தி வந்த 18 லட்சம் தங்கம் பறிமுதல் : சென்னை வாலிபர்கள் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஒரு தனியார் விமானம் வந்தது. அதிலிருந்து சுற்றுலா விசாவில் வந்த சென்னையை சேர்ந்த முகமது உசேன் (26), முஸ்தபா (29) ஆகியோரது உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர்.

அப்போது, முகமது உசேன் கொண்டு வந்த எல்இடி பல்புகளின் மேல்பாகம் தங்கத்தால் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், டிவி ஸ்பீக்கரில் தங்கத்தை சிறு துண்டுகளாக மறைத்து, 3 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. முஸ்தபாவின் பெட்டியை ஆராய்ந்ததில், செல்போன்களில் 15 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. ஒரே விமானத்தில் வந்த 2 பேரிடம் 18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: