ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கடன் வழங்குதல் 15% உயர்வு

சென்னை: ரெப்கோ ஹோம் பைனான்சில் கடன் வழங்குதல் 15% உயர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் அரையாண்டு கணக்கு நிதி நிலை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கை: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் இந்தியன் அக்கவுன்டிங் ஸ்டாண்டர்சின் படி அரையாண்டு (செப்.30 வரை) நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளது. அதில், நிகர வட்டி அளவு மற்றும் வட்டி 4.5%, 3.1% முறையே உள்ளது. கடன் ஒப்புதல் 15 சதவீதமும், கடன் வழங்குவதல் 14 சதவீதமும் உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் 2% உயர்ந்து 225.8 கோடியாக உள்ளது. நிகர லாபம் 1% உயர்ந்து 127.8 கோடியாக உள்ளது. கடன் ஒப்புதல் 15% உயர்ந்து 15920 கோடியாகவும், கடன் வழங்குதல் 14% உயர்ந்து 1480.5 கோடியாகவும், தனி நபர் வீட்டு கடன் 13% சதவீதமும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: