ஆந்திரா தம்பதி தவறவிட்ட 30 சவரன் நகை ஒப்படைப்பு

சென்னை: சென்னை, எழும்பூர் ரயில்நிலையத்தில் ஆந்திரா தம்பதி தவறவிட்ட, 30 சவரன் தங்க நகை மீட்கப்பட்டது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் மதி (38), இவர் தனது கணவர் மலைகனியுடன் விருதுநகரில்  நடந்த தனது உறவினர் வீட்டின் திருமணத்திற்கு சென்றுவிட்டு, சொந்த ஊரான ஆந்திராவிற்கு செல்வதற்காக நேற்று திரும்பியுள்ளனர். அப்ேபாது எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக ‘ப்ரீபெய்டு ஆட்ேடா’ புக் செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர், அங்கு சென்று பார்த்த போது மதி கையில் வைத்திருந்த கைப்பை காணாமல் போயிருந்தது. அந்த கைபைக்குள், 30 சவரன் தங்க நகை இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர்கள் இது குறித்து புகார் அளிப்பதற்காக, மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அதற்குள் ரயில்வே நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் வினோத்,(32), ஆனந்த்(37), தணிகைவேல்(42) ஆகியோர், மதி தவறவிட்ட கைப்பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் 30 சவரன் நகையை ஆந்திரா தம்பதியிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்க நகையை பத்திரமாக மீட்டு கொடுத்த, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நன்றி கூறினர். இதையடுத்து, ரயில்வே போலீசார் அவர்களை பாராட்டினர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: