தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்புகள் குறைப்பு : முதல்வர் பேட்டி

திருச்செங்கோடு: கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே திட்டமிட்டு அரசு செயலாற்றியதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானிலை மையத்தின் அறிவுறுத்தலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறினார். புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றார். கடலோர மாவட்டங்களில் நிவாரண பணிகளை பார்வையிட அமைச்சர்கள் செல்ல உள்ளதாக கூறினார். புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மின் விநியோகத்தை சீரமைக்க போர்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இயற்கை சீற்றங்கள் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என யாராலும் கணிக்க முடியாது என்றார். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்பு குறைக்கப்பட்டது. நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் நாளை செல்ல உள்ளனர் என்றார். புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோயை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைந்து பணியாற்றி மின்விநியோகம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: