காட்டு யானைகள் கணுவாயில் முகாம் : மக்கள் பீதி

பெ.நா.பாளையம்: கோவை பெரிய தடாகம் அருகே அனுவாவி சுப்ரமணியர் கோயில் வனப்பகுதியில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியேறும் 2 காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காலை நேரத்தில் இவை திரும்பி காட்டுக்குள் சென்று விடுகின்றன. நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் நுழைந்த இந்த 2 யானைகளும், கணுவாயில் பள்ளி கட்டிடத்தின் ஓடுகளை உடைத்து சேதம் செய்தன. திருவள்ளுவர் பகுதியில் சுற்றி திரிந்தன. இதை தொடர்ந்து இன்று காலை யானைகள் வனத்திற்குள் செல்லாமல் கணுவாய் செக்டேம் பகுதியில் முகாமிட்டன. இதனால், அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் பீதி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிக்கு அருகில் யானைகள் சுற்றி வருவதால் அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியில் வர பயந்து வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: