வந்தவாசியில் கனமழை எதிரொலி : மின்னல் தாக்கி மூதாட்டி படுகாயம்

வந்தவாசி,வந்தவாசியில் மின்னல் தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். கஜா புயல் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பேபியம்மாள் (75) என்பவர் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கி கால் பகுதியில் படுகாயமடைந்தார். மேலும்  வீட்டின் முன்பக்க கதவு ஜன்னல் மின்னல் தாக்கி சுக்குநூறாக உடைந்து சேதமானது. உடனே அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த மின்னல் தாக்குதலின்போது மூதாட்டியின் வீட்டில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

செய்யாறு: செய்யாறு அடுத்த பெரிய ஏழாச்சேரி கிராமத்தில் நேற்று காலை நூறுநாள் வேலை திட்ட பணி நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது லேசான மழையுடன் பலத்த இடிமின்னலுடன் பலத்த சத்தம் கேட்டது. இதனால் அந்த அதிர்ச்சியில் சின்னக்குழந்தை(70), அஞ்சலை(50), ஜோதிலட்சுமி(30) ஆகிய 3 பெண்களும் திடீரென மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: