வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளை கண்காணிக்க கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

வேலூர்: தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு வாங்கப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளை சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதிதாக வாங்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதோடு இம்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை யாருக்கு அளித்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் விவி பேட் மெஷின் பொருத்தப்பட உள்ளது.

இதற்கிடையில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகள் நடந்து முடிந்ததையடுத்து, ஆய்வுப்பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை. வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்க, தேர்தல் பணிக்கு தேவைப்படும் ஊழியர்கள் போன்ற விவரங்களை துறைவாரியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் டோல்கேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட அறைகளுக்கு சிசிடிவி கேமரா வைப்பதற்கான ஆய்வுப்பணிகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: