ஆம்பூரில் மூன்று இடங்களில் வாகன விபத்துக்களை தடுக்க பிளிங்கர் சிக்னல் அமைப்பு

ஆம்பூர்: ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் 3 இடங்களில் பிளிங்கர் சிக்னல்களை அமைத்துள்ளனர்.சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ஆறு வழி சாலையில் ஆம்பூர் முக்கிய நகரமாக திகழ்கிறது. இரு பகுதிகளாக பிரிக்கும் இந்த ஆறு வழிச்சாலை மற்றும் ரயில்வே தண்டவாளம் ஆகியவற்றை அன்றாடம் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்து செல்கின்றனர். மேலும் சென்னை, பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கின்றன.  நாள்தோறும் ஆம்பூர் சரகத்திற்குட்பட்ட பள்ளிகொண்டா காவல் நிலையம், ஆம்பூர் தாலுகா காவல் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.  இதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில் ஆம்பூர் ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு, பஸ் நிலையம் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சந்திப்பு ஆகிய இடங்களில் முதற்கட்டமாக பிளிங்கர் சிக்னல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இடங்களில் அதிர்வு தரும் பட்டை கோடுகள், ஒளிரும் சாலை பதிப்பு விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.இதற்கான பணிகள் நேற்று துவங்கியது. இதனை ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் பார்வையிட்டார். ஆம்பூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் பிளிங்கர் சிக்னல் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: