திருச்சியில் லட்சம் வாழைகள் நாசம் : மரங்கள் சாய்ந்தன; மின்சாரம் துண்டிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, கோவில்பட்டி, துவரங்குறிச்சி, மருங்காபுரி, புத்தாநத்தம் உள்ளிட்ட பல இடங்களில் கஜாபுயல் கரையை கடந்த வேளையில் கனமழை பெய்தது. அதன் பின்னர் பேய் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மணப்பாறை நகரில் பலத்த சூறைக்காற்றுக்கு பல வீடுகளின் மேல் மரங்கள் சாயந்தன. வெள்ளக்கல் - கோவில்பட்டி ரோட்டில் மஸ்தான் தெரு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகளின் மேல் விழுந்துள்ளன. மருங்காபுரி பகுதியில் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  திருச்சி - மணப்பாறை மெயின்ரோட்டில் செல்போன் டவர் காற்றில் சாய்ந்தது. முசிறி, தொட்டியம் , தா.பேட்டை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் காற்றுடன் சேர்ந்த மழையால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன.

காற்றின் வேகத்தால், மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள்  சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பல பகுதிகளில் தடைபட்டது. இதனால் வேலைக்கு செல்லும் கட்டிட தொழிலாளர்கள் பலரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நேற்று இரவிலிருந்து வீசும் சூறைக்காற்றுக்கு கடைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள், சாலையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ போர்டுகள், சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் காற்றில் பறந்தன.லால்குடி, அந்தநல்லூர், மணிகண்டம், தொட்டியம், மண்ணச்சநல்லூர்,  திருவெறும்பூர் ஒன்றியங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பலத்த சூறைக்காற்றுக்கு 1 லட்சம் வாழைகள் சாய்ந்தன. இதில் அதிகபட்சமாக லால்குடியில் 2 ஆயிரம் வாழைகள் முற்றிலும் சேதமாயின.  திருச்சி வயலூர், குழுமணி, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், அல்லூர்,ஆகிய பகுதிகளில்  ெபாங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் அதிவேக காற்றினாலும், கனமழையினாலும் சாய்ந்தன. திருவெறும்பூர் அடுத்த கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. சூறைக்காற்றுக்கு 100 ஏக்கர் முற்றிலும் வேரோடு சாய்ந்தன.  திருவானைக்காவல் - கல்லணை ரோட்டில் பழமையான மரங்கள் காற்றில் ரோட்டில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நெடு்ஞ்சாலைத்துறையினர் ரோட்டில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதே போல் மாநகாில் தில்லைநகர், மன்னார்புரம், கருமண்டபம், ரங்கம், எடமலைப்பட்டிபுதூர், பொன்மலைப்பட்டி பழைய ரயில்வே குடியிருப்பு மற்றும் சுற்றுலா மாளிகையில் மரங்கள் சாய்ந்தன. மரங்கள் விழுந்த சமயத்தில் ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.காற்றின் வேகத்தின் மாவட்டத்தின் பல இடங்களில் வீடுகளில் மேல் மரங்கள் விழுந்து சாய்ந்து கிடக்கின்றன.  மாவட்டத்தில்  பல இடங்களில் மின் கம்பங்கள்    நேற்றிரவு முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வி்டப்பட்டிருந்தது.

ரயில் நடுவழியில் நிறுத்தம்:

திருச்சி - கரூர் ரயில் வழித்தடத்தில் மின்சாரம் தடை பட்டதால் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் மற்றும் கரூர் - திருச்சி இடையேயான பயணிகள் ரயில் நடுவழியில் மணி கணக்கில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

மணப்பாறை அருகே இளங்காகுறிச்சி என்ற இடத்தில் மின் கம்பி அறுந்ததால் மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வையம்பட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் டி கார்டன் எக்ஸ்பிரஸ் ரயில் பெருகமணியிலும், கரூர் - திருச்சி பயணிகள் ரயில் பெட்டவாய்த்தலையில் நிறு்த்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: