அண்ணா பல்கலையின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: கஜா புயல் பாதிப்பின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலையின் தேர்வுகள் மூன்றாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று மற்றும் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கஜா புயல் பாதிப்பின் காரணமாக சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை (நவ.17) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தவைக்கப்படுகின்றன.

Advertising
Advertising

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும். எனினும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் ஆகிய கல்லூரிகளில் தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 இதன் காரணமாக தமிழகம் முழுக்க சுமார் 3 லட்சம் பேர் எழுதவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நேற்று நடைபெறவிருந்த தேர்வு நவம்பர் 22ம் தேதியும், இன்று நடைபெறவிருந்த தேர்வு டிசம்பர் 13ம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: