கஜா புயல் எதிரொலி : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரயில் சேவை பாதிப்பு

சென்னை : திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர், திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சி,நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் காரணமாக அதிகாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததோடு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்த விழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது.

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் ரயில்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர், திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு - அம்பாத்துரை இடையே எஸ்.புதுக்கோட்டையில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் திருவனந்தபுரம் - மும்பை ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் 2 மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் இன்று மாலை 6 மணி மற்றும் இரவு 9.20 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் சென்னை - எழும்பூர் - காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில் தாமதமாக புறப்படும் என்றும் எழும்பூரில் இருந்து மாலை 3.45க்கு பதில் இரவு 7.15க்கு ரயில் புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: