கஜா புயல் பாதிப்பின் காரணமாக ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: கஜா புயல் பாதிப்பின் காரணமாகத் தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் 6 பயணியர் ரயில்களும், திருச்சிக் கோட்டத்தில் 8 பயணியர் ரயில்களும் ஒரு விரைவு ரயிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை - இராமேஸ்வரம் இடையிலான 4 பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி - இராமேஸ்வரம் இடையிலான 2 பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மயிலாடுதுறை - தஞ்சாவூர், திருச்சி - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - திருவாரூர், திருச்சி - மானாமதுரை, காரைக்குடி - திருச்சி ஆகிய நகரங்கள் இடையிலான 8 பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மன்னார்குடி - திருப்பதி பாமணி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கஜர் புயலின் அதி வேக காற்று காலணமாக வழித்தளங்கனில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் வழிதளங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: