தமிழகத்தை புரட்டி எடுத்த கஜா புயல் கேரளா சென்றது : வானிலை மையம் தகவல்

சென்னை: கஜா புயல் தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்கு சென்றது என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழக எல்லையை கடந்து அரபிக்கடல் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. திண்டுக்கல்லில் நிலை கொண்டு இருந்த இந்த தாழ்வு நிலை அரபிக் கடல் நோக்கி நகர்ந்து சென்று தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து கேரள மாநிலத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை உள்ளிட்ட கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சபரிமலை, கொல்லம், கோட்டயம், திருவனந்தபுரம், கொச்சியின் சில பகுதிகள், ஆலப்புழாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. சபரிமலை நடை மாலை திறக்க உள்ள நிலையில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஏற்கனவே அங்கு பெண்கள் செல்வது குறித்த பிரச்சனை நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இடையில் கனமழை எச்சரிக்கையால் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: