கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் 100 ஆடுகள் பலி, 7 மாவட்டங்களில் 28 கால்நடைகள் உயிரிழப்பு

சென்னை : கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மொத்தம் 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. முன்னதாக வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்தது. இதற்கிடையே கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.கஜா புயலில் சிக்கி 216 குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 286 மேடான இடங்கள் கண்டறியப்பட்டு கால்நடைகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் 166 மருத்துவ குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளதாகவும் 55 டன் தீவனங்கள் கால்நடைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதனிடையே கஜா புயல் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில்  மொத்தம் 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கடலூரில் 8, புதுக்கோட்டையில் 15, தஞ்சையில் 3, திருச்சியில் 2 கால்நடைகள் உயிரிழந்த நிலையில், நாகை மற்றும் திருவாரூரில் கால்நடை உயிரிழப்புக்கள் ஏதும் இல்லை. இதனிடையே கஜா புயலால் கோடியக்கரை சரணாலய மான்கள் உயிரிழந்தது. ஆறுக்காட்டுத்துறை கடற்கரை அருகே 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்தது. அரியவகை கடல்வாழ் ஜெல்லி மீன்களும் உயிரிழந்து கரை ஒதுங்கின.   புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 ஆடுகள் கஜா புயலில் சிக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: