புயலால் பாதித்த தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் : முதலமைச்சரிடம், ராஜ்நாத் சிங் உறுதி

புதுடெல்லி: புயலால் பாதித்த தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. கஜா புயல் பாதிப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடலைபேசியில் கேட்டறிந்தார். புயல் பாதிப்பு குறித்து கண்காணிக்க மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கஜா புயல் வேதாரண்யத்தில் இன்று கரையை கடந்தது. இதனால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது.

வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து முடங்கியது. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செல்போன் கோபுரங்கள் முறிந்து விழுந்ததில் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக 82,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

20 பேர் உயிரிழப்பு

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்தது. இதற்கிடையே கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: