குட்கா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: குட்கா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு, சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடத்தபட்ட விசாரணை மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் இந்த குற்றபத்திரிக்கையை தயாரித்து இருப்பதாகவும், கூடுதல் குற்றபத்திரிக்கை பின்னர் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரது பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், வேறு யாருடைய பெயர்களும் இடம் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: